மட்டக்களப்பில் 40 ஆதரவற்றோர் இல்லங்கள்- நீளும் கருணைக்கரம்.

http://www.battinews.com/2013/01/40.html?m=1Tuesday, January 29, 2013

கிழக்கு மாகாணத்தின் யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் பின்னர் அநேகம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அதேபோல் அநேகம் பெண்கள் விதைவகளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறைவனால் படைக்கப்படும் யாரும் அநாதைகள் அல்ல, அவர்கள் இறைவனின் திருக்குழந்தைகள் என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்த மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில், இந்த குழந்தைகளை வழிநடாத்துகின்ற 40 சிறுவர் இல்லங்கள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு(http://hrcsl.lk/tamil/?page_id=813) அறிக்கையிட்டுள்ளது.
 
கூத்துக்களும் குரவைகளும் கொம்முமுறி விளையாட்டும்
பார்த்து பசியாறுதற்க்கு பால்தயிரும் நெய்தேனும்
சேர்த்து சுவைக்கின்ற சிங்கார வள்ளியெங்கள்
பூத்தமலர் பொன்னழகுப் பொன்நாடாம் எம்நாடு.
 
இப்படியான செல்வம் மிகு எம்நாடு ஏற்றம் பெற்றுள்ளதா என்று நாம் கேட்கவேண்டி இருக்கிறது. அதிகரித்துக் காணப்படும் வறுமை, கலாசாரச் சீர்கேடு, வெளிநாட்டுமோகம், பெற்றோர்களிடம் காணப்படும் கல்விசார் விழிப்பற்ற நிலமை அதற்க்கு மேலாக கடந்த யுத்தம் என்பன எமது குழந்தைகளை ஏற்றமில்லாத ஒரு சமுதாயத்தின் அங்கத்தவர்களாக முத்திரை பதித்துள்ளது. இவைகாரணமாக 2005 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி 500 மேற்ப்பட்ட சிறுவர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட தமிழ் பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். மீட்புப்பணிகளுடன் கூடவே நாம் இழந்துவிட்ட ஒரு தலைமுறைச் சிறுவர்கள் பற்றியும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பற்றியும்  சிந்திக்க  வேண்டும்.
‘சடுதியாக நடைபெற்ற சம்பவத்தின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறாத பிஞ்சுகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு வழிவகையாக தத்தெடுத்தல் அமையுமாயினும் அது அவர்களிடம் பெருமளவிலான உளத்தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும். இதனால்தான் அதற்கு மாறாக உளக்காயங்களுக்கு மருந்தாகும் இல்லங்கள் உருவாக்கம் பெற்று உதவுகிறது. அந்த வகையில் திருப்பழுகாமத்தில் இயங்கி வரும் விபுலாநந்தா இல்லம் இந்தப் பிரதேச அநாதரவான சிறுவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்’ என இங்கு பராமரிப்பாளராக இருக்கும் சாமித்தம்பி யோகராசா அவர்கள் தெரிவித்தார்.
 
இது 2003 இல் இந்த பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டு, இங்கு யுத்தம், அனர்ததங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மிக வறிய நிலையில் உள்ள குழந்தைகளின் சரனாலயமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் திருப்பழுகாம பொதுமக்களின் கருணையினால் உணவளிக்கப்பட்டு, பல குழந்தைகள் ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். 
 
‘இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்’ 
திரு விநாயமூர்த்தி சிவம்

என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க இங்குள்ள துடிப்பான இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த நல்ல கைங்கரியத்தினை செய்து வருகின்றனர். ‘இந்தக் குழந்தைகளுக்கு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. இந்தத் பெற்றோரை இழந்த படிக்கும் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதிற்க்கிணங்க, இதே திருவூரை பிறப்பிடமாகக் கொண்ட திரு விநாயமூர்த்தி சிவம் அவர்களால் ஒருதொகை படுக்கை உபகரணங்கள் உங்களுடைய அமைப்பினரால் 20.01.2013 அன்று வளங்கபட்டுள்ளமை உன்மையில் பாராட்டப்படவேண்டிய ஒரு செயலாகும். அவருக்கு இந்த ஊர், மற்றும் இல்ல குழந்தைகள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்’ என இல்லப் பொறுப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

 
இன்னும் பின்தங்கி போய்க்கொண்டிருக்கும் எங்கள் இனத்தினை கட்டி எழுப்புபவர்களை விட தட்டிக் கழிப்பவர்கள்தான் அதிகம். இருப்பினும்  ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவவானிலும் நனி சிறந்தனவே’ என பிறந்த நாட்டை, மக்களை, பண்பாட்டையும் மறந்திடாமல் இந்த மண்ணின் உயிர் கொண்ட மனிதனாக, எங்கள் குழுமத்தின் உறுப்பினராக இருந்து ஆலோசனைகளையும், பொருத்தமான உதவிகளையும் உவந்தளித்து வரும் விநாயமூர்த்தி சிவம் அவர்களைப்போல் எமது நாட்டின் மீது அக்கறை கொள்ளும் ஆர்வலர்களுக்கு இங்குள்ள அனைத்து தமிழ் மக்கள் சார்பாகவும் வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 உங்கள் 
பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும். விவேகானந்தர் .
(மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )
Like and share in your facebook !

இல்ல மாணவர்களுடன் -நிகழ்வுகளின் நிழல்கள் 
Advertisements
Gallery | This entry was posted in Reconciliation, Woman & Community. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s